Movie Reviews


Starring: Shanthnoo, Chandni
Direction: K Bagyaraj
Music: Dharan, Babu Shankar, S Thaman
Production: KBR Medias Private Ltd
Source: Behindwoods
Renowned screenplay writer and director K Bhagyaraj would be relieved to see his son on the silver screen this Friday as his directorial venture Siddu +2 will be released after a long time. Due to various issues, the movie had been in the cans for a while and is finally being distributed by Moser Baer. Produced by KBR Medias Pvt. Ltd, Siddu +2 has Shanthnoo and Chandini in lead roles with the director himself with Rajesh and Ganja Karuppu in supporting roles.

The movie is about Siddu, who finds it tough to pass in his school exams. In spite of his father (Rajesh) being the principal of the school that he studies in, he fails in subjects every now and then. Matters become worse when Siddu gets insulted in front of others and he attempts suicide. Accidentally, he meets Chandini, who, more or less, is in the same situation as Siddu is. The two then become friends, friendship becomes love and they drop the idea of losing their lives. Does Shanthnoo’s love succeed with Chandini’s family’s consent? Does he eventually pass in his exams? This is Siddu +2 in short. The story has a twist too, claims Bhagyaraj, who has taken care of the screenplay, dialogues and the direction of this movie. The story of Siddu has been written by Krishna Da Vinci.
When it is K Bhagyaraj donning the director’s cap, there is sure to be some interesting interweaving of all emotions and a surety of intricate nuances being taken care of. Chandini’s debut in Siddu +2 has her in a bubbling role and she, according to sources, has perfectly fit into the character of innocence of a naïve girl who comes from a small town. People who watched the trailer can say with confidence that Shanthnoo looks every bit like his father. It reminds us of Bhagyaraj’s earlier hit movies like Mouna Geethangal, Indru Poi Naalai Vaa etc. Shanthnoo’s get-up and mannerisms looked very similar to his father. If 40% were imitations of his father, 60% of his style suits today’s generation with urban clothes, accessories et al.
Exotic locations carefully selected in Chennai, Palani and Hyderabad and the song sequences on the beaches of Bangkok are sure to appeal to the masses. Dharan’s ‘Poove Poove’ is pleasing to listen to and another song, which is a remix of the hit ‘Naan aalana Thaamarai….’, is also interesting. The editing department has been headed by Subash and camera has been wielded by Rasamathi.
Being a popular face after his Taxi song, Shanthnoo is banking heavily on Siddu +2. With an array of movies releasing this weekend, Siddu +2 would be watched closely by many as it is directed by K Bhagyaraj and has a promising actor in the lead. Siddu’s +2 result can only be known after the opening weekend. Let us wait and watch!


 கனிமொழி

அயிட்டம்டான்ஸ் எனப்படும் ஒத்தபாட்டுக்கு குத்தாட்டம் போடும் கவர்ச்சி நடிகையாக தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பிக்க தொடங்கிய நடிகை சோனா ஹைடன், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் கனிமொழி. தனது தயாரிப்பு என்பதால் தானும் நடித்தே தீருவேன் என்று அடம்பிடிக்காமல் தயாரிப்பு பொறுப்பை கூட அம்மா கிரியேஷன்ஸ் சிவாவிடம் கொடுத்து அடக்கி வாசித்து இருக்கிறார் சோனா என்பது பாராட்டுக்குரியது.
கதைப்படி கதாநாயகர் ஜெய் தனக்கு பாதகமாக அமையும் விஷயங்களைக்கூட சாதகமாக நடந்ததாக கற்பனை செய்து கொண்டு கனவுலகிலேயே வாழும் விசித்திரமான பாத்திரம். அவரது வாழ்‌க்கையிலும் காதல் வருகிறது. அந்த காதலும் ஜெய்க்கு கனவாய் கலைகிறதா? அல்லது நிஜமாகிறாதா? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், சொல்லியிருக்கும் படம் தான் கனிமொழி.
இல்லாத கா‌தலை இருப்பதாக உணர்ந்து காட்சிக்கு காட்சி அகமும், முகமும் மலரும் ராஜேஷ் எனும் கதாபாத்திரத்தில் ஜெய் அசத்தலாக நடித்திருக்கின்றார். மற்ற படங்களை காட்டிலும் இதில் பல படங்கு அழகும், வசீகரமாகவும், தெரியும் ஜெய், அதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சிதம்பரத்திற்கு ஸ்பெஷல் நன்றியும் சொல்ல வேண்டும். அனு எனும் கதாநாயகி பாத்திரத்தில் புதுமுகம் சாஷன் பத்மஸ்ரீ ஒரு அழகுபதுமையாக வந்து போகிறார். நடிப்பில் இன்னும் சற்றே முயற்சித்திருந்தால் வந்திருக்கும்.
ஜெய் விரும்பி அவருக்கு கிடைக்காத பொருள் எல்லாம்,  கவுசிக் எனும் பாத்திரத்தில் நடித்துள்ள சென்னை-28, விஜய்வசந்த்திற்கு, கிடைக்கிறது. அவ்வாறே கதாநாயகியும் இவருக்கு கிடைப்பது ஜெய் மீது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பரிதாபத்தையும், பச்சாதாபத்தையும், வரவழைப்பதுதான் கனிமொழி படத்திற்கு கிடைக்கும் வெற்றி! இந்த மூவரை போன்றே ஜெய் நண்பர்களாக வரும் மைக்கேல், ரங்கா, தீபக், மூவரும் பளீச்சென்று நம் மனதில் பதிய புதிய இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமிக்கு கிடைத்த வெற்றி எனலாம். இவர் வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
சதீஷ்சக்கர்வர்த்தியின் இசை, பி.சிதம்பரத்தின் ஒளிப்பதிவு, பிரியா மணிகண்டனின் உடை அலங்காரம் உள்ளிட்ட ஏகப்பட்ட ப்ளஸ்பாய்ண்டுகள் படத்தில் இருந்தும், கனிமொழியின் பின்பாதியில் இருக்கும் சுறுசுறுப்பும், விறுவிறுப்பும், முன்பாதியில் இல்லாமல் அடிக்கடி பெட்ரூம், பாத்ரூம், புட்-பால் டீம், மச்சான் மாமன் பிரண்ட்ஷிப் என போரடிப்பது காய்மொழியாக கசக்கிறது. முன்பாதியில் ஸ்ரீபதி இன்னும் சற்று முயன்றிருந்தால் கனிமொழி கற்கண்டு மொழியாக இனித்திருக்கும்.

சிக்கு புக்கு


நிறைவேறாதஅப்பாவின் காதலும், நிறைவேறிடும் பிள்ளையின் காதலும் தான் “சிக்குபுக்கு”! மறைந்த ஒளிப்பதிவாளர் – இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து, அவரது திடீர் மறைவுக்குப் பிறகு “தாம்தூம்” படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்த கே.மணிகண்டனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அடுத்தபடம் தான் சிக்குபுக்கு என்பது கூடுதல் சிறப்பு.
லண்டன் வாழ் இந்தியர்களான ஆர்யாவும் ஸ்ரேயாவும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே சமயத்தில் சொந்த ஊரான காரைக்குடிக்கும் மதுரைக்கும் வருவதற்காக ஒரே விமானத்தில் பெங்களூரு வந்தடைகின்றனர். லண்டனிலும், விமானத்திலும் சந்தித்து கொள்ளாத இவர்கள், விமான ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஒரே ரயிலில் கணவன்-மனைவியாக பயணிக்க வேண்டிய நிலை. ரயில் பயணத்திற்காக வேறு ஒரு தம்பதியின் பெயரில் பொய்யாக கணவன்-மனைவி ஆன இந்த ஜோடி நிஜத்தில் சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் க்ளைமாக்ஸ்! இதனிடையே ஆர்யாவின் அப்பாவின் (அவரும் ஆர்யா தான்) காதல் சுவடுகளையும் பயணிக்க செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியிருப்பதுடன் விமான பயணம், ரயில் பயணம் போதாதென்று நடைபயணம்,சைக்கிள் பயணம், கார் பயணம், லாரி பயணம், பேருந்து பயணம் என்று ஆர்யாவையும் ஸ்ரேயாவையும் படம் முழுக்க பயணிகளாக்கி காதல் பயணம் சென்றிருப்பதுதான் சிக்குபுக்குவின் ஹைலைட்!
அந்த காலத்தில் வாழ்ந்த அப்பா ஆர்யா, இந்த காலத்தில் வாழும் மகன் ஆர்யா என இருவேறு கெட்-அப்புகளில், கேரக்டர்களில் ஆர்யா அழகாகவே நடித்திருக்கிறார். சில இடங்களில் அப்பா ஆர்யாவும், அவரது காதலும் மகன் ஆர்யாவையும் அவரது காதலையம் ஓவர்டேக் செய்து விடுவதும் குறிப்பிடத்தக்கது.சந்தானம், ஜெகன் ஆகியோருடன் ஆர்யா செய்திருக்கும் காமெடியும் கலகலப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை! மகன் ஆர்யாவின் ஜோடி ஸ்ரேயா, வழக்கம் போலவே துருதுரு கேரக்டரில் விறுவிறு என நடித்து ஓவர் ஆக்டிங் செய்து, ஓவர் கிளாமரும் காட்டி ரசிகர்களை தன்வசப்படுத்தி விடுகிறார்.
அப்பா ஆர்யாவின் ஜோடியாக மீனாள் பாத்திரத்தில் வரும் ப்ரீத்தி, பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு; அம்மணிக்கு நிறையவே நடிக்க வாய்ப்பிருப்பதால் ஸ்ரேயாவை விட நிறையவே ஸ்கோர் செய்திருக்கிறார்.சண்முகசுந்தரம், ரவிச்சந்திரன்,சுகுமாரி,வையாபுரி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.அப்பா ஆர்யாவின் நண்பராக வரும் அனூப்குமார் மூலம் இயக்குநர் ஏதோ சொல்ல வருகிறார் என்பது முன்பாதியிலேயே புரிந்தாலும், பின்பாதியில் அவர் மீதே கதை பயணிப்பதை எதிர்பார்க்க முடியவில்லை. அதே மாதிரி அப்பாவின் காதலி, ஆர்யாவுக்கு என்னமுறை? என்பதையும் அவரது மகள் ஆர்யாவுக்கு என்ன உறவாகிறார்? என்பதையும் யோசித்தால் ஏதேதோ என்னவெல்லாமோ தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ண ஓட்டத்திற்கு எல்லாம் இடம் கொடுக்காமல், அப்பாவிற்கு நிறைவேறாத காதல், மகனுக்கு நிறைவேறுவதாக படத்தை முடித்திருக்கும் இயக்குநர் கே.மணிகண்டனுக்கு ரொம்பவே துணிச்சல்தான்.
ஏமாற்றத்தில் கே.பி.குருதேவின் ஒளிப்பதிவிலும் கலோனியல் கஸின்ஸ் ஹரி-லெஸ்லியின் இசையமைப்பிலும். சிக்குபுக்கு டெக்னிக்கலாக காட்டும் பிரம்மாண்டத்தை சில இடங்களில் ஆமை வேகத்தில் நகரும் கதையிலும், காட்சி அமைப்பிலும் காட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். சிக்குபுக்கு கதைக்கும்,பெயருக்கும் என்ன சம்பந்தம் என ஆராயாமல் சட்டுபுட்டுன்னு போய் ஒருமுறை பார்க்கலாம் !!
Raththa Charithram Movie Review

Cast: Suriya, Vivek Oberoi, Priyamani, Shatrughan Sinha, Sasi, Sudeep
Direction: Ram Gopal Varma
Music: Mani Sharma

Raththa Charithram is about a man seeking to avenge the wrong done to him by turning into a victim of revenge. The strong point of this film is that it is based on a true incident.

Documentary films are genre apart from feature films and it is the duty of the director to ensure that while making a real-life incident into a movie, a viewer should not feel that it has traces of a documentary.

Ram Gopal Varma seems to have failed miserably on this aspect; especially in scenes where there is a background narration.

Suriya, Vivek Oberoi and all the other small characters in the film have performed well but unfortunately none of the characters remain etched in our minds. Not one of them has scope in Rattha Charithram. It makes a viewer feel so distanced from the film so much so that one may not be conscious of who is dead and who is alive in the film.

Though a film has a lot of violence, it should have an impact on the audiences who should at least be able to relate to the incidents that is shown on screen. But the director has failed on that aspect too. Though there are several gory scenes in RC, it fails to shock the audiences because, as mentioned earlier, the film does not create an impact in our minds.

The camera work needs a special mention because it is in sync with the story and script. The background music is nothing but noisy. There is no normalcy in the dialogues. It is really appreciable that kuthu songs, dances and comedy have been avoided by the director despite them being a prerequisite for commercial success. But the director could have averted the drama feel in this film.

One is left with the impression that something is incomplete in RC. Perhaps too much has been censored or much has been said in the prequel that the Tamil audiences failed to get it in this part?

Be warned that excessive slow motion sequences can cause irritation and headache.

It is true that we cannot expect intriguing and engaging scenes in a film based on reality, but the director could have elaborated in the political background to make the film more interesting.

Raththa Charithram – only Raththam in this Charithram!




 

மைனா


மைனா வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே படுபயங்கர எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் ஓரளவு பூர்த்தியும் செய்திருக்கிறது.
குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ. பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்! இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே… என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!
க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.
மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு. அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் – தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.
மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், சிந்து சமவெளியில் விட்டதை இங்கே பிடித்து விட்டார். இவர் அழகான பெண்பால் மட்டுமல்ல… அருமையான நடிப்பாலும் நம்டம தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.
விதார்த் – அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.
சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை காணாத தமிழ்சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இதுதான் க்ளைமாக்ஸோ, அதுதான் க்ளைமாக்ஸா இருக்குமோ… என எக்கச்சக்கமாக யோசிக்க விட்டு, யாருமே யோசிக்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் வித்தியாசமாகத் தெரிகிறார்.